ஓச்சேரி பிள்ளையார் கோவில் தெருவில் பழைய சாலையை அகற்றி விட்டு புதிதாக போட கோரிக்கை
ஓச்சேரி பிள்ளையார் கோவில் தெருவில் பழைய சாலையை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை
காவேரிப்பட்டணம்
ஓச்சேரி பிள்ளையார் கோவில் தெருவில் பழைய சாலையை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்ேபட்டை மாவட்டம் ஓச்ேசரி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் சிமெண்டு சாலை அமைக்க உள்ளனர். மேலும் குடிநீர் குழாய் பதிக்க உள்ளனர். குடிநீர் குழாைய அமைத்த பிறகு புதிதாக சிமெண்டு சாலை போடும் பணியை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் ஏற்கனவே உள்ள பழைய சிமெண்டு சாலையை அகற்றி விட்டு புதிதாக சிமெண்டு சாலை அமைக்க ேவண்டும். பழைய சிமெண்டு சாலையை அகற்றாமல் அதன் மீது புதிதாக சாலை அமைத்தால் அந்தச் சாலையை மக்கள் நீண்டநாள் பயன்படுத்த முடியாது, விரைவிலேயே சேதமாகி விடும் என்பதை கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர் கவனத்தில் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story