குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய கோரிக்கை
குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் வாய்மேடு, அண்ணா பேட்டை, தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக் ்குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரியிலிருந்து வேதாரண்யம் செல்லும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பிரதான குழாயில் மருதூர் கடைத்தெரு பகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இருந்து தண்ணீர் பீறிட்டு எழுந்து வீணாகி வருகிறது.
சீரமைக்கப்படுமா?
நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருவதால் மேற்கண்ட பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் வீடுகளுக்கு போதியளவு குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம். இதுகுறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story