முத்துமாரியம்மன் கோவில் மேற்கூரையில் சேதமடைந்த கண்ணாடியை சீரமைக்க கோரிக்கை
முத்துமாரியம்மன் கோவில் மேற்கூரையில் சேதமடைந்த கண்ணாடியை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டையில் ஊரின் மையப்பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவிலில் உள்ளே சூரிய வெளிச்சம் வருவதற்காக மேற் கூரையில் பல இடங்களில் கண்ணாடி பதிக்கப்பட்டது. இதில் நுழைவுவாயில் அருகில் உள்ள கண்ணாடி உடைந்து ஆபத்தான நிலையில் பக்தர்கள் மீது விழுகின்ற வகையில் உள்ளது. கண்ணாடி உடைந்து இருப்பதால் அதன் மூலம் மழை நீர் கோவிலுக்குள் விழுகிறது. எனவே அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறும் முன் உடைந்த நிலையில் காணப்படும் கண்ணாடியை சீரமைக்க கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story