சாலையை சீரமைக்க கோரிக்கை
புங்கனூர்-வெண்டயம்பட்டி இடையே உள்ள சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் புங்கனூரில் இருந்து வெண்டயம்பட்டி செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை புங்கனூரில் பிரியும் இடத்திலிருந்து 1½ கிலோமீட்டர் தூரத்துக்கு மிக மோசமாக குண்டும்- குழியுமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.மேலும் காமத்தி ஏரியின் கரையோரத்தில் பல இடங்களில் சாலை அரிக்கப்பட்டு உள்ளது..இதனால் இந்த சாலை வழியாக 2 சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
கிராமப்புற விவசாய விளைபொருட்களை கொண்டு செல்லும் சாலையாக இந்த சாலை அமைந்துள்ளது. ஆகவே, இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story