சாலையை சீரமைக்க கோரிக்கை


சாலையை சீரமைக்க கோரிக்கை
x

பூம்புகார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையத்தின் மூலம் வானகிரி, பூம்புகார், மேலையூர், மணிகிராமம் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் தார்சாலை மிகவும் பழுதடைந்து குண்டும்-குழியுமாக காட்சி அளிக்கிறது. ஆகவே, இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






Next Story