உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க கோரிக்கை
கடையநல்லூரில் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
தென்காசி
கடையநல்லூர்:
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்தநிலையில் சென்னை தலைமை செயலகத்தில் கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது அவர், கடையநல்லூர் நகர இளைஞர்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உள்ள பெண்களின் நலன் கருதியும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் கடையநல்லூரில் இரண்டு இடங்களில் பெரிய அளவில் விளையாட்டு மைதானங்களும், நவீன விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய உடற்பயிற்சி கூடங்களும் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார்.
Related Tags :
Next Story