புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரிக்கை
புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ராமநாதபுரம்
திருவாடானை
திருவாடானை தாலுகா பாகனூர் ஊராட்சி இளஞ்சியமங்கலம், கிடங்கூர் கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் பல ஆண்டுகளாக குறைந்த அழுத்த மின்சாரம் உள்ளது. இதனால் மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. மேலும் குறைந்தழுத்த மின்சாரத்தால் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய மின்விசிறி, அயன் பாக்ஸ், குளிர்சாதன பெட்டி, பல்புகள் போன்ற மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகி வருகிறது. எனவே, கூடுதல் மின் வசதி கிடைத்திடும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் ஊராட்சி தலைவர் பாப்பா ராமு கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story