தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்க கோரிக்கை


தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்க கோரிக்கை
x

தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மற்றும் தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மூலம் பயன்பெற்று வருகின்றனர். இவர்கள் சலுகை கட்டணத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தநிலையில் இந்த ஆஸ்பத்திரியில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் போதிய டாக்டர் இல்லை. இதனால் எலும்பு முறிவு சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல் இங்கு தீக்காய சிகிச்சை பிரிவு இல்லை. தீ விபத்தில் சிக்கி காயம் அடையும் தொழிலாளர்கள் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சிவகாசி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தீக்காய சிகிச்சை பிரிவை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story