விளை நிலங்களுக்குள் மழைநீர் புகாமல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


விளை நிலங்களுக்குள் மழைநீர் புகாமல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஏர்த்தாங்கல் கிராமத்தில் விளை நிலங்களுக்குள் மழைநீர் புகாமல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலூர்

குடியாத்தம் அருகே உள்ள எர்த்தாங்கல் கிராமம் உள்ளது. எர்த்தாங்கல் கிராமத்தில் குட்டைமேடு பகுதியில் உள்ள கால்வாய் மேடுப்பகுதியில் மழைக்காலங்களில் ஊற்றுகள் மூலம் வெள்ளமாக பெருக்கெடுக்கும் தண்ணீர் எர்த்தாங்கள் கிராம வழியாக பெரும்பாடி ஏரிக்கு செல்ல வேண்டும். அதேபோல் சுற்றுப்புற பகுதியில் பெய்யும் மழைநீரும் பெரும்பாடி ஏரிக்கு செல்ல வேண்டும. ஆனால் வழிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் ஊற்று தண்ணீரும், மழைநீரும் பெரும்பாடி ஏரிக்குச் செல்ல வழி இல்லாமல் விளைநிலங்களுக்குள் புகுந்து பல நாட்கள் தேங்கி நிற்பதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால் எர்த்தாங்கல் பகுதியில் பல ஏக்கர் விளை நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து விவசாயிகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே இனியும் அதுபோன்ற நிலை ஏற்படுவதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு ஊற்றுத் தண்ணீர் மற்றும் மழைநீர் தங்குதடையின்றி பெரும்பாடி ஏரிக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும். வழியில் உள்ள ஆக்கிரமப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துளளனர்.


Next Story