செட்டிநாடு ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்-மத்திய மந்திரியிடம் கோரிக்கை


செட்டிநாடு ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்-மத்திய மந்திரியிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செட்டிநாடு ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என மத்திய மந்திரியிடம் கோரிக்கை விடுத்தனர்.

சிவகங்கை


சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி மத்திய அமைச்சர் எல்.முருகனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த செட்டிநாடு ெரயில் நிலையத்தில் முன்பு ெரயில்கள் நின்று சென்றன. தற்போது அங்கு ெரயில்கள் நிற்காமல் சென்று கொண்டு இருக்கின்றது.

எனவே ஏற்கனவே நின்றது போல அனைத்து ரெயில்களும் செட்டிநாடு ெரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். அவருடன் சிவகங்கை நகர் பா.ஜ.க. தலைவர் உதயா உடன் இருந்தார். இந்த மனுவின் நகலை ெரயில்வே துறை மந்திரி மற்றும் தென்னக ெரயில்வே பொது மேலாளர் ஆகியோர்களுக்கு அவர் அனுப்பி உள்ளார்.


Next Story