நடப்பு பாசனத்துக்கு தேவையானஉரம், விதைகள் தயார்;வேளாண் அதிகாரிகள் தகவல்


நடப்பு பாசனத்துக்கு தேவையானஉரம், விதைகள் தயார்;வேளாண் அதிகாரிகள் தகவல்
x

நடப்பு பாசனத்துக்கு தேவையான உரம், விதைகள் தயாராக இருப்பதாக வேளாண் அதிகாரிகள் தொிவித்துள்ளனா்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கீழ்பவானி பாசன பகுதியில் நன்செய் பயிருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது அறுவடை பணி நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து புன்செய் பாசனத்துக்காக பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் புன்செய் பாசன பகுதிக்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் தயார் நிலையில் இருப்பதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் நவம்பர் மாதம் வரை 84 ஆயிரத்து 926 ஏக்கர் வேளாண் பயிர்கள், 32 ஆயிரத்து 713 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. வரும் புன்செய் பாசனத்துக்கு வழங்குவதற்காக, வேளாண் விரிவாக்க மையங்களில் நெல் விதை 17.137 டன், சிறுதானியங்கள் 1.6 டன், பயறு வகை விதைகள் 28.7 டன், எண்ணெய் வித்துக்கள் 29.25 டன் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் ரசாயன உரங்களான யூரியா 6 ஆயிரத்து 88 டன், டி.ஏ.பி. 2 ஆயிரத்து 168 டன், பொட்டாஷ் 1,468 டன், காம்ப்ளக்ஸ் உரம், 13 ஆயிரத்து 90 டன் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. நடப்பு பாசனத்துக்கு தேவையான அளவு உரம் மற்றும் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப உடனடியாக கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story