3 டன் ரேஷன் அரிசியை சரக்கு வேனில் கடத்திய 2 பேர் கைது
திருப்பூர்
தாராபுரம் திருமலைபாளையம் அருகே வாகன சோதனை செய்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தனர். அந்த வேனில் மூடை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
வேனில் வந்தவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பழனி புது ஆயக்குடியை சேர்ந்த நடராஜ் (வயது 33) என்பதும், அவர் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்தி சென்று கள்ள சந்தையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. உடன் திண்டுக்கல் கொடைக்கானல் ரோடு பகுதி சேர்ந்த டிரைவர் சரத்குமார் (25) இருந்தார்.
மொத்தம் 3 ஆயிரத்து 10 கிலோ ரேஷன் அரிசி மூடைகள் மற்றும் சரக்கு வேனை குடிமைப் பொருள் வழங்கல் குற்றனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நடராஜ், சரத்குமார் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
Next Story