தம்பியின் பெயரில் போலி ரேஷன் கார்டு


தம்பியின் பெயரில் போலி ரேஷன் கார்டு
x
திருப்பூர்


காங்கயம் அருகே 6 வருடத்துக்கு முன் இறந்து போன தனது தம்பியின் பெயரில் போலி ரேஷன் கார்டு இருப்பதாக கூறி விவசாயி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்தவர் பெயரில் போலி ரேஷன் கார்டு

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் காங்கயம் வீரசோழபுரம் பச்சாங்கவுண்டன்வலசு பகுதியை சேர்ந்த விவசாயி கார்வேந்தன் (வயது 36) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எனது தம்பி சரவணக்குமார் (31) கடந்த 5-11-2016 அன்று இறந்து விட்டார். அதன்பிறகு எங்கள் ரேஷன் கார்டில் இருந்து தம்பி சரவணக்குமார் பெயரை நீக்கம் செய்து வாரிசு சான்று காங்கயம் தாசில்தாரிடம் வாங்கினேன். எனது தந்தை விபத்தில் இறந்து விட்டார். நான் எனது தாயாருடன் 2 ஏக்கர் 57 சென்ட் நிலத்தில் தென்னை பயிரிட்டு அங்கேயே வீட்டில் வசித்து வருகிறேன்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி எங்கள் பகுதி ரேஷன் கடைக்கு நான் பொருட்கள் வாங்க சென்றேன். அப்போது கடை ஊழியர் எனது தம்பி சரவணக்குமார் பெயரை குறிப்பிட்டு, எனது வீட்டு முகவரியிலேயே அவர் பெயரில் ரேஷன் கார்டு இருப்பதாகவும், அதற்கான ஆதார் எண், வங்கி கணக்கு எண்ணை இணைக்க வேண்டும் என்றார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனது தம்பி இறந்து 6 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் பெயரில் ரேஷன் கார்டும், 2 கியாஸ் சிலிண்டர் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேறு செல்போன் எண்

காங்கயம் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று விவரம் கேட்டபோது எனது தம்பியின் புகைப்படத்துடன் கார்டு இருப்பது தெரியவந்தது. எனது தம்பியின் ஆதார் கார்டில் எனது செல்போன் எண் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் பெயரில் உள்ள ரேஷன் கார்டுடன் வேறு செல்போன் எண் இணைக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் யார் என்று தெரியவில்லை. எனது தம்பி ஒருவரின் பெயரில் இந்த ரேஷன் கார்டு இருக்கிறது. எவ்வாறு புதிய ரேஷன் கார்டு வாங்கினார்கள். போலியாக வழங்க யார் துணை புரிந்தார்கள்? என்று விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலப்பிரச்சினை

ஏற்கனவே எனது தோட்தம்பியின் பெயரில் போலி ரேஷன் கார்டுதம்பியின் பெயரில் போலி ரேஷன் கார்டுடத்து நிலப்பிரச்சினை உள்ளது. எனது தம்பி கல்லூரிக்கு செல்கிறேன் என்று கூறி சென்றவர், ஈரோடு மாவட்டம் அரச்சலூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஓடாநிலையில் தோட்டத்துக்குள் இறந்து கிடந்தார். விஷம் குடித்து இறந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது எனது தம்பியின் பெயரில் எங்கள் ஊரிலேயே ரேஷன் கார்டு இருப்பது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது சொத்தை அபகரிக்க நினைப்பவர்கள் போலி ஆவணங்களை தயாரித்துள்ளார்களா? என்பது குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Next Story