6 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு
6 கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்பு
குடிமங்கலம்
திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் கிராமம் அருள்மிகு மாரியம்மன் விநாயகர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் திருப்பூர் இணை ஆணையர் அவர்களின் உத்தரவின்படி ஆய்வு செய்யப்பட்டபோது மேற்படி நிலத்தினை ஆக்கிரமிப்புதார்கள் தாமாகவே முன்வந்து ஒப்படைத்ததால். அதன் அடிப்படையில் திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வராஜ் அவர்கள், சரக ஆய்வர் சுமதி, செயல் அலுவலர் அம்சவேணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் முன்னிலையில் சுவாதீனம் பெறப்பட்டு அறிவிப்பு பலகை திருக்கோயில் சார்பாக வைக்கப்பட்டது. இந்நிலத்தின் மதிப்பு சுமார் 6.30 கோடி ஆகும். இதேபோல் சிந்திரலுப்பு கிராமத்தில் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான பட்டா எண் 188 புல எண் 15 மற்றும் 16 புஞ்சை நிலம் 9.22 ஹெக்டர் பரப்பளவு நிலம் சி நாகூரில் உள்ளது. இந்த இடம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது..