கைதான கும்பலிடம் இருந்து 16 கிலோ திமிங்கல எச்சம் மீட்பு
விருதுநகரில் கைதான கும்பலிடம் இருந்து 16 கிலோ அளவுக்கு திமிங்கல எச்சங்கள் மீ்்்ட்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகரில் கைதான கும்பலிடம் இருந்து 16 கிலோ அளவுக்கு திமிங்கல எச்சங்கள் மீ்்்ட்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும்.
திமிங்கல எச்சங்கள்
நெல்லையில் இருந்து சிலர், திமிங்கல எச்சத்தை (ஆம்பர்கிரீஸ்) விருதுநகருக்கு கடத்தி வருவதாக வனப்பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரை வன காவல் நிலைய உதவி வன பாதுகாவலர் மனிஷா அலிமா, வன பாதுகாப்பு படையை சேர்ந்த மலர்வண்ணன், வனவர் செந்தில் ராகவன் ஆகியோர் விருதுநகர் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திமிங்கல எச்சத்தை கடத்தி வந்ததாக நெல்லையை சேர்ந்த அப்துல்ரகுமான் (வயது 40), பத்மகுமார் (34), விருதுநகரை சேர்ந்த மனோகரன் (58), தர்மராஜ் (54), ராஜாமன்னார் (62) ஆகிய 5 பேரை வனப்பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
16 கிலோ
பின்னர் அவர்களிடம் பறிமுதல் செய்த 16 கிலோ திமிங்கல எச்சத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கல எச்சத்தின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து 5 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.