ரெயிலில் வந்தபோது மாயமான 2 பேர் மீட்பு


ரெயிலில் வந்தபோது மாயமான 2 பேர் மீட்பு
x

ரெயிலில் வந்தபோது மாயமான 2 பேர் மீட்கப்பட்டனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

ரெயிலில் வந்தபோது மாயமான 2 பேர் மீட்கப்பட்டனர்.

காஞ்சீபுரத்தை அடுத்த வளத்தூர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் ஷேக் மொய்தீன் (வயது 68). இவரது மகன் அபிசூர் ரஹ்மான் (37), மகள் ஷகிரா பானு (35) ஆகியோர் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து அரக்கோணத்திற்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருவதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.

இதில் அப்துல் காதர் ஷேக் மொய்தீன் மற்றும் அவரது மனைவிக்கு டிக்கெட் உறுதியானது. மனநலம் குன்றிய மகன் அபிசூர்ரஹ்மான் மற்றும் மகள் ஷகிராபானுவை அதே ரெயிலில் பொது பெட்டியில் அமர வைத்துவிட்டு, அப்துல் காதர். அவரது மனைவி முன்பதிவு பெட்டியில் வந்ததாக கூறப்படுகிறது.

ரெயில் நேற்று முன்தினம் அதிகாலை அரக்கோணம் ரெயில் நிலையத்தை வந்தடைந்த போது ரெயிலில் இருந்து இறங்கிய தம்பதியினர் தங்களது மகன் மற்றும் மகள் பொது பெட்டியில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட அபிசூர் ரஹ்மான், ஷகிரா பானு ஆகியோரை போலீசார் மீட்டு அவர்களை அப்துல் காதர் ஷேக் மொய்தீனிடம் ஒப்படைத்தனர்.


Next Story