மானாமதுரை அருகே விலைமதிப்பு மிக்க 3 சிலைகள் மீட்பு - போலீசார் விரித்த வலையில் சிக்கிய வாலிபர்


மானாமதுரை அருகே  விலைமதிப்பு மிக்க 3 சிலைகள் மீட்பு - போலீசார் விரித்த வலையில் சிக்கிய வாலிபர்
x

விலைமதிப்பு மிக்க 3 சிலைகள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் விரித்த வலையில் வாலிபர் சிக்கினார்.

மதுரை


விலைமதிப்பு மிக்க 3 சிலைகள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் விரித்த வலையில் வாலிபர் சிக்கினார்.

சாமி சிலைகள்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பில்லத்தி கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்ரன் (வயது 35). இவர் மானாமதுரை அருகே சுந்தரநடப்பு கிராமத்தை சேர்ந்த போஸ் என்பவரிடம் பழமையான சாமி சிலைகளை பெற்றுள்ளதாகவும், அதை அவரது வீட்டின் ஒரு பகுதியில் மறைத்து வைத்திருப்பதாகவும், அந்த சிலைகளை தலா ரூ.60 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்று வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் ஆலோசனையின் பேரில், போலீஸ் அதிகாரிகள் அந்த சிலைகளை வாங்குபவர்கள் போல நடித்து வீரபத்திரனிடம் பேசினர். அப்போது அவர் பணத்தை காண்பித்தால்தான் சிலைகளை காட்டுவேன் என கூறினாா். இதையடுத்து மறுநாள் தாங்கள் பணத்தை கொண்டு வருவதாக கூறி அதிகாரிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.

2 பேர் கைது

இதைத் தொடர்ந்து மறுநாள் மானாமதுரை அடுத்த விளாங்குளம் விலக்கு சாலையில் பணத்துடன் தாங்கள் நிற்பதாகவும், சிலைகளுடன் வருமாறும் மாறுவேடத்தில் இருந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளனர். அதன்பேரில் சிலைகளுடன் அங்கு வந்த வீரபத்திரனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ஸ்ரீதேவி, பூதேவி, கருப்பசாமி ஆகிய 3 உலோக சிலைகள் மீட்கப்பட்டன.

மேலும் இது தொடர்பாக தப்பி ஓடிய போஸ் மதுரையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மதுரை வந்து, போைசயும் கைது செய்தனர். போலீசார் நடவடிக்கையால் மீட்கப்பட்ட சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது, இந்த திருட்டில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story