மராட்டியத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் மீட்பு


மராட்டியத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் மீட்பு
x

உசிலம்பட்டி அருகே கொத்தடிமையாக நடத்தப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து மராட்டியத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே கொத்தடிமையாக நடத்தப்பட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து மராட்டியத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

கரும்பு வெட்டும் தொழில்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பல விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கரும்ைப தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை அருகே உள்ள ஒரு தனியார் கரும்பு ஆலைக்கு அனுப்பி வருகிறார்கள். தற்போது மதுரை மாவட்டம் பகுதியில் கூலி தொழிலாளர்கள் போதிய அளவில் கிடைக்காததால் வெளி மாநிலங்களில் இருந்து கரும்பு வெட்டுவதிற்காக கூலி தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் வெளி மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கானோர் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் கரும்பு வெட்டும் தொழிலில் அமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறைந்த கூலி தருவதாக..

உசிலம்பட்டி அருகே உள்ளது தொட்டப்பநாயக்கனூர்.இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் கிராமத்தில் விவசாய பணிகளான கரும்பு வெட்டும் வேலைகளுக்கு மராட்டிய மாநிலம் பீட் மற்றும் பர்பானி மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் உசிலம்பட்டி பகுதிக்கு அழைத்து வந்து பணிசெய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இங்கு மட்டும் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 3 பெண்கள், 2 ஆண்கள் மற்றும் 2 சிறுவர்கள் என மொத்தம் 7 நபர்கள் தங்களுக்கு முறையாக வேலைக்கான கூலி வழங்காமல் குறைந்த அளவு கூலி வழங்கு வதாகவும், இருப்பிடம் மற்றும் உணவுகள் என எந்த அடிப்படை வசதிகளும் முறையாக வழங்கப்படவில்லை என்றும்

மேலும் தினமும் அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை வேலை செய்ய கட்டாயப்படுத்துவதாகவும், ஒப்பந்ததாரர் ஒப்பந்தம் பேசியபடி கூலி தாராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

7 பேர் மீட்பு

இது குறித்து மராட்டியத்தில் விஷால் சுரேஷ்கஸ்பே என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கலெக்டர் அனிஷ்சேகர் உசிலம்பட்டி தாசில்தாருக்கு இது குறித்து உரிய விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் உசிலம்பட்டி தாசில்தார் சுரேஷ் பிரடிக் கிளைமென்ட் தலைமையில் அதிகாரிகள் அம்பாசமுத்திரம் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டவர்களிடம் ஆய்வு மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட 7 பேரையும் மீட்டு அவருடைய சொந்த மாநிலத்துக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் ஒப்பந்த அடிப்படையில் இங்கு கூலி தொழிலுக்கு வந்தவர்கள் மீண்டும் அவர்களுடைய சொந்த ஊருக்கு செல்லும் பொழுது அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

=====


Related Tags :
Next Story