இரும்பு கேட்டில் தலை சிக்கிக்கொண்ட நாய் மீட்பு


இரும்பு கேட்டில் தலை சிக்கிக்கொண்ட நாய் மீட்கப்பட்டது

மதுரை

பேரையூர்

பேரையூரில் உள்ள வத்திராயிருப்பு சாலையில் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலின் நுழைவு வாயில் இரும்பு கேட்டில் பெமரேனியன் வகையை சேர்ந்த நாய் ஒன்று தனது தலையை நுழைத்து வெளியில் வர முடியாமல் சிக்கிக் கொண்டது. நாயினுடைய பரிதாப குரலைக் கேட்டு, அருகில் இருந்த அங்கன்வாடி மையத்தில் உள்ளவர்கள் டி.கல்லுப்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் குருசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரும்பு கேட்டில் தலையை நுழைத்து சிக்கியிருந்த நாயை 20 நிமிடம் போராடி பத்திரமாக மீட்டனர்.மீட்கப்பட்ட நாய் சந்தோஷமாக குரைத்துக் கொண்டே அங்கிருந்து ஓடியது.


Next Story