வீட்டுக்குள் புகுந்த பாம்பு மீட்பு
வீட்டுக்குள் புகுந்த பாம்பு மீட்கப்பட்டது.
ஊட்டி,
ஊட்டி அடுத்த ரோஸ் மவுண்ட் அன்பு நகர் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் பாம்பு புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். மேலும் அப்பகுதியில் வரிசையாக வீடுகள் இருப்பதால், பொதுமக்கள் அனைவரும் குழந்தைகளுடன் வெளியே வந்து விட்டனர். இதுகுறித்து ஊட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பாம்பை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்து கொண்டு சென்றனர். பிடிபட்ட பாம்பு வெள்ளிக்கோல் வரையன் என்றும், ஓநாய் பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு விஷத்தன்மை கிடையாது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அன்பு நகரில் மரங்கள் அதிகமாக உள்ளன. நாங்கள் பெரிய பாம்பை பார்த்தோம். அதனால் ஒருவித பயமாகவே உள்ளது என்றனர்.