கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றி மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றி மீட்பு
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் அருகே இன்கோ நகரில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றுக்குள் காட்டுப்பன்றி தவறி விழுந்து, உயிருக்கு போராடி கொண்டு இருந்தது. இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், தேவாலா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனச்சரகர் அய்யனார் தலைமையிலான வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்றனர். தொடர்ந்து கயிறு கட்டி கிணற்றுக்குள் தத்தளித்து கொண்டு இருந்த காட்டுப்பன்றியை மீட்டனர். தொடர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர். இதையடுத்து வனத்துறையினருக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story