மின்கம்பியில் அடிபட்டு காயமடைந்த மயில் மீட்பு
சாத்தான்குளம் அருகே மின்கம்பியில் அடிபட்டு காயமடைந்த மயில் மீட்கப்பட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே உள்ள தஞ்சைநகரத்தில் உள்ள தாவீது என்பவரின் தோட்டப்பகுதிக்கு நேற்று மதியம் மயில் ஒன்று மேய்ச்சலுக்கு வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மயில் இறக்கையில் உயர் மின்அழுத்த கம்பியில் அடிப்பட்டு காயங்களுடன் கீழே விழுந்தது. இறக்கையில் அடிபட்டதால் பறக்கமுடியாமல் இருந்த மயிலை பார்த்த தாவீது வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அங்கு விரைந்து வந்த வனவர் ஜெயசேகர், வனக்காப்பாளர் அருண் ஆகியோர் மயிலை மீட்டனர். பின்னர் அந்த மயிலை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story