தூத்துக்குடியில்கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு


தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மேல அலங்காரதட்டை சேர்ந்தவர் பார்வதி (வயது 70). இவர் நேற்று வீட்டில் உள்ள உறைகிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டாராம். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சகாயராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். தொடர்ந்து கிணற்றில் தத்தளித்துக் கொண்டு இருந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story