கிணற்றில் விழுந்த மிளா மீட்பு


கிணற்றில் விழுந்த மிளா மீட்பு
x

நெல்லை அருகே கிணற்றில் விழுந்த மிளா மீட்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள பொன்னாக்குடியில் இசக்கி பாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் நேற்று ஒரு மிளா விழுந்து வெளியே வரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவுப்படி, உதவி வன பாதுகாவலர் ஷானவாஸ் கான், வனச்சரகர் சரவணகுமார், வனவர் அழகர், வன கால்நடை டாக்டர் மனோகரன், வன கால்நடை ஆய்வாளர் அர்னால்டு மற்றும் வனத்துறையினர் பொன்னாக்குடிக்கு விரைந்து சென்றனர்.

அங்கு தண்ணீரில் தத்தளித்த மிளாவை பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அது 4 வயதுடைய ஆண் மிளா என்பது தெரியவந்தது. பின்னர் அதனை களக்காடு தலையணைக்கு மேல் மலைப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.


Next Story