வலையில் சிக்கிய மலைப்பாம்பு மீட்பு


வலையில் சிக்கிய மலைப்பாம்பு மீட்பு
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே வலையில் சிக்கிய மலைப்பாம்பு மீட்கப்பட்டது.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே வலையில் சிக்கிய மலைப்பாம்பு மீட்கப்பட்டது.

தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு குருசடி காட்டுக்குளம் பகுதியில் வின்சென்ட் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் உள்ளது. தோட்டத்தில் உள்ள பயிர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க தோட்டத்தை சுற்றி வலையால் வேலி அமைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று காலை வின்சென்டின் மகன் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தோட்டத்துக்கு சென்றார். அப்போது வலையில் 10 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்று சிக்கி நகர முடியாமல் தவித்து கொண்டிருந்தது. இதை கண்ட அவர் அப்பகுதி வாலிபர்கள் உதவியுடன் மலைப்பாம்பை பத்திரமாக மீட்டார். பின்னர் அந்த மலைப்பாம்பை தக்கலை தீயணைப்பு நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Next Story