தீவட்டிப்பட்டி அருகே60 அடி ஆழ கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு


தீவட்டிப்பட்டி அருகே60 அடி ஆழ கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்பு
x

தீவட்டிப்பட்டி அருகே 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த புள்ளி மான் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

சேலம்

ஓமலூர்:

புள்ளிமான்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கணவாய்புதூர் ஊராட்சி கே.என்.புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 43). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஆண் கொம்பு மான் ஒன்று தவறி விழுந்தது.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் காடையாம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மீட்பு

தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜசேகர் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர். 60 அடி ஆழ கிணற்றில் 40 அடியில் தண்ணீர் கிடந்தது. தண்ணீரில் புள்ளிமான் தத்தளித்துக் கொண்டிருந்தது.

உடனே தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினர். பின்னர் மானை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதன்பிறகு மானை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் மானை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுத்தனர்.


Next Story