மாயமான தச்சு தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்பு


மாயமான தச்சு தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்பு
x

மத்தூர் அருகே மாயமான தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

மத்தூர்

மாயம்

மத்தூர் அடுத்த சமத்துவபுரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 40). தச்சு தொழிலாளி. இவர் உடல்நலம் பாதித்த நிலையில் கடந்த 2-ந் தேதி மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவருடைய தாய் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மாயமான வெற்றிவேலை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் ஆண் ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

விசாரணை

பின்னர் அவர்கள் கிணற்றல் இறங்கி இறந்த ஆண் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். போலீசாரின் விசாரணையில் இறந்தவர் மாயமான வெற்றிவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வெற்றிவேலின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவேல் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வெற்றிவேலுக்கு ஒரு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story