மாயமான விவசாயி கிணற்றில் பிணமாக மீட்பு
ஆம்பூர் அருகே மாயமான விவசாயி கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
ஆம்பூரை அடுத்த உமராபாத் அருகே உள்ள பாலூர் பகுதியை சேர்ந்தவர் ரங்கன் (வயது 50). விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த 15-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறி சென்றார். அதன்பின் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இநத்நிலையில் சம்பவத்தன்று மாலை அங்குள்ள விவசாய கிணற்றில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கிணற்றில் கிடந்த உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் காணாமல் போன ரங்கன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.