கைப்பந்து வலைக்குள் சிக்கிய குரங்கு மீட்பு


கைப்பந்து வலைக்குள்  சிக்கிய குரங்கு மீட்பு
x
தினத்தந்தி 11 July 2023 12:15 AM IST (Updated: 11 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கழுகுமலையில் கைப்பந்து வலைக்குள் சிக்கிய குரங்கு மீட்கப்பட்டது.

தூத்துக்குடி

கழுகுமலை:

கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவில் கைப்பந்து விளையாட வலை கட்டப்பட்டிருந்தது. நேற்று இந்த வலை மீது ஏறி குரங்கு ஒன்று விளையாடி கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக திடீரென வலையில் அதன் கால் சிக்கி கொண்டது. பல மணி நேரம் போராடியும் குரங்கால் வலையிலிருந்து வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கதுரை தலைமையிலான வீரர்கள் அங்கு வந்தனர். வலையில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த குரங்கை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மீட்டனர். பின்னர் அந்த குரங்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.


Next Story