மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு


மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் யூனியனை சேர்ந்தது மடப்புரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் பல்வேறு திட்ட பணியில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நேற்று மாவட்ட திட்ட இயக்குனர் சிவராமன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையொட்டி பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள், 15-வது நிதி குழு மானியத்தில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் போன்றவற்றை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது யூனியன் ஆணையாளர் அங்கையற்கன்னி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் மாணிக்க வாசகம், ஒன்றிய உதவி பொறியாளர்கள் தேவிகா, தமிழரசி, இளநிலை பொறியாளர் பத்மநாபன், மேற்பார்வையாளர்கள் ரவி, குமார், மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சபர்மதி பாலபோதகுரு, துணைத்தலைவர் காளீஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story