மதுவிலக்கு, ஆய தீர்வைத்துறை ஆணையாளர் ஆய்வு
மதுவிலக்கு, ஆய தீர்வைத்துறை ஆணையாளர் ஆய்வு நடத்தினார்.
தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் மதிவாணன், சிவகங்கை வந்தார். இதையொட்டி அவர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும், அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் அரசின் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தவும், அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றவும், தேவையான நிதி மற்றும் சலுகைகளை பெற்று தருவதற்கு அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்துத்துறை அலுவலர்கள் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு, திட்டங்களின் பயன்களை முழுமையாக பொதுமக்களுக்கு சென்றடைய செய்ய வேண்டும் என்றார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் வானதி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), ரெத்தினவேல் (தேவகோட்டை), காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து மற்றும் அதிகார்கள் கலந்து கொண்டனர்.