உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
மானாமதுரை,
மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் உரக்கடைகளில் வேளாண்மை உதவி இயக்குனர், தரக்கட்டுப்பாடு பரமேஸ்வரன் மற்றும் உர ஆய்வாளர் கிருத்திகா ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். விவசாயிகளுக்கு தேவையான உரங்களை வைக்குமாறும், உரங்களை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் தட்டுப்பாடு இன்றி உரம் கிடைக்கின்றதா என்று ஆய்வு செய்தனர். உரக்கிடங்குகளுக்கு சென்று உரங்கள் சரியான அளவில் இருப்பு உள்ளதா எனவும் சோதனை செய்து பார்த்து, விவசாயிகளுக்கு விற்பனையை முனைய எந்திரங்கள் மூலம், மானிய உரங்கள், இருப்பு விவரங்கள், விலைப்பட்டியல், உர உரிமங்கள், அனுமதி பெறாத உரங்கள் ஏதேனும் இருப்பில் உள்ளனவா என்பது பற்றியும் ஆய்வு செய்தனர்.
மேலும் உரக்கடை உரிமையாளர்களிடம் விதிமீறல்களில் ஈடுபட்டால் உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர். தொடர்ந்து விவசாயிகளுக்கு தேவையான உரங்களை மானிய விலையில் அதிகாரிகள் வழங்கினர். உரம் வாங்கி சென்ற பொதுமக்களிடம் தட்டுப்பாடு இன்றி உரம் கிடைக்கிறதா என்றும் விசாரித்தனர்.