காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு


காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் புற நோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, பரிசோதனை ஆய்வகம், இயன்முறை சிகிச்சை பிரிவு, மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, அறுவை சிகிச்சை பிரிவு, சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, கர்ப்பப்பை அகற்றுதல் பிரிவு, பித்தப்பை கல்லடைப்பு அகற்றும் சிகிச்சைமுறை, தொற்று நோய் பிரிவு, மனநலப்பிரிவு, செவித்திறன் ஆய்வு பிரிவு, குழந்தைகளுக்கான வெளி மற்றும் உள் நோயாளிகள் பிரிவு, சிசு பராமரிப்பு பகுதி, விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை முறைகள் மற்றும் நவீன கருவிகளின் செயல்பாடுகளை பார்வையிட்டு கேட்டறிந்தார்.

மரக்கன்றுகள்

மேலும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடம் கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின் போது வருகை பதிவேட்டில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை, வருகை தந்த மருத்துவர்கள், விடுப்பில் உள்ள மருத்துவர்கள், சிறப்பு பிரிவு மருத்துவர்கள் எண்ணிக்கை குறித்து ஆவணங்களை பார்வையிட்டார். குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்தும், வெளி நோயாளிகளின் பிரிவுக்கு சென்று சிகிச்சை அளிக்கப்படும் முறை குறித்து பொது மக்களிடமும், மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார்.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் 300 மரக்கன்றுகளை நடும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார். உடன் மட்ட சுகாதார துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், மாவட்ட தலைமை மருத்துவமனையின் தலைமை மருத்துவர் தர்மர், காரைக்குடி தாசில்தார் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story