தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு


தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு
x
தினத்தந்தி 26 Dec 2023 9:14 AM GMT (Updated: 26 Dec 2023 10:10 AM GMT)

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

தூத்துக்குடி,

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் சமீபத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில். நெல்லை, தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி, பாதிப்புகளை ஆய்வுசெய்ய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை நியமித்துள்ளதாக தெரிவித்தார். இதன்படி, விமானம் மூலம் சென்னைக்கு நிர்மலா சீதாராமன் நேற்று இரவு வந்தடைந்தார்.

இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணை மந்திரி எல்.முருகன் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் வந்த நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தி.மு.க., எம்.பி., கனிமொழி, உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மழை பாதிப்பு குறித்த படக்காட்சிகளை நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் பார்வையிட்டனர். அவர்களுக்கு தி.மு.க., எம்.பி.,கனிமொழி மற்றும் அதிகாரிகள் பாதிப்பு குறித்து விளக்கி கூறினர்.


Next Story