நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் ஆய்வு


நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் ஆய்வு
x

திருவண்ணாமலையில் நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் பிரபாகர் திருவண்ணாமலை வட்ட செயல்முறை கிடங்கில் ஆய்வு செய்தார்.

அப்போது பொது விநியோகத் திட்ட புழுங்கல் அரிசி, எப்.ஆர்.கே. பச்சரிசி, கோதுமை மற்றும் பருப்பு ஆகியவற்றின் தரத்தினை சோதனை செய்தார். பொதுமக்களுக்கு தரமான அரிசி, தரமான பருப்பு ஆகியவற்றை வழங்குவது தொடா்பாக அறிவுரைகள் வழங்கினார்.

தொடர்ந்து செங்கம் தாலுகாவில் உள்ள இறையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தினை ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு 413 விவசாயிகளிடம் இருந்து சன்னரக நெல் 500 டன்னும், பொது ரக நெல் 1124 டன்னும் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது. திருவண்ணாமலை மண்டலத்தில் நெல் கொள்முதல் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

கரீப் பருவம் 2022-23 திருவண்ணாமலை மண்டலத்தில் கடந்த 12-ந் தேதி வரை 66 ஆயிரத்து 978 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கலெக்டர் முருகேஷ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் தேன்மொழி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story