"ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு: ஆலோசித்து முடிவு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு: ஆலோசித்து முடிவு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

ஸ்குவாஷ் உலககோப்பை போட்டிகள் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடைபெறும்.

தமிழ்நாட்டில் ஸ்குவாஷ் உலகக்கோப்பை நடைபெறுவதால் விளையாட்டுத்துறை பெருமைப்படுகிறது. தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பதற்காக இந்த போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.

ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டிகள் ஜூன் 13 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் ஹாங்காங், சீனா, ஜப்பான், எகிப்து, தென் ஆப்ரிக்கா, மலேஷியா உள்ளிட்ட 8 நாடுகள் கலந்துக்கொள்ள உள்ளன. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். ஸ்குவாஷ் போட்டி நடத்த ரூ 1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான ஒட ஒதுக்கீடு குறித்து முதல்-அமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.


Related Tags :
Next Story