குலசேகரன்பட்டினத்தில் நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு


குலசேகரன்பட்டினத்தில் நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு
x

குலசேகரன்பட்டினத்தில் நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா நடந்தது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினத்தில் அனுகூலபுரம், தோப்பார்கடை பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி மூலம் தலா ரூ.1.25 லட்சத்தில் கட்டப்பட்ட 2 சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகள் திறப்பு விழா நடைபெற்றது.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங் தலைமை வகித்து இரு சிறுமின்விசை நீர்த்தேக்க தொட்டிகளையும் திறந்து வைத்தார். யூனியன் துணைத்தலைவி மீரா சிராஜூதீன், வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவி சொர்ணப்பிரியா துரை, துணைத்தலைவர் கணேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜெசி பொன்ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும், உடன்குடி யூனியன் அலுவலகத்தில், நம்ம ஊரு சூப்பரு திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாவாகி பக்கீர் முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்க பொறுப்பாளர் சாந்தி, திருச்செந்தூர் கோட்ட உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ்வரி ஆகியோர் இத்திட்டம் குறித்தும், அது செயல்படுத்துவது குறித்தும் பேசினர். இதில் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story