பட்டா வழங்க ஆய்வு


பட்டா வழங்க ஆய்வு
x

பட்டா வழங்க ஆய்வு

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு பூலவாரி சுகுமார் நகரில் 12.78 ஏக்கர் பரப்பளவில் நொய்யல் ஆறு புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக 500 குடும்பங்கள் பட்டா இன்றி வசித்து வருகின்றனர். இந்த நிலத்தை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க திருப்பூர் மாவட்ட கலெக்டரால் முன்மொழிவுகள் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் கடந்த 14.10.2022 அன்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு கடிதத்தின் வாயிலாக வலியுறுத்தினார்.

அதன்படி கடந்த 25.11.2022 அன்று நடைபெற்ற 7-வது செயலாக்க குழு கூட்டத்தில் தலைைம செயலாளர் முன்னிலையில் வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய்வது தொடர்பாக கூட்டம் நடைபெற்றது. முடிவில் இந்த நிலத்தினை திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவர், பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் மற்றும் வாரிய நிர்வாக பொறியார் ஆகியோர் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று திருப்பூர் சுகுமார் நகரை திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் ஆய்வு செய்தனர். இதில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், பொதுப்பணித்துறையின் நிர்வாக பொறியாளர் மற்றும் வாரிய நிர்வாக பொறியாளர், திருப்பூர் தெற்கு தாசில்தார் கோவிந்தராஜ், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு. நாகராஜன், வடக்கு மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பகுதி செயலாளர் உசேன், வட்ட செயலாளர் முகமது அலி மற்றும் நிர்வாகிகள், அந்தபகுதி பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அதேபோல் திருப்பூர் செல்லாண்டியம்மன் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.



Next Story