குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் கவலை


குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் கவலை
x

கொள்ளிடத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை


கொள்ளிடம்:

கொள்ளிடத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

வெள்ளப்பெருக்கு

கர்நாடக பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல், சோதியக்குடி, சந்தைப்படுகை, வாடி உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது.இதை தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கி உள்ளனர். கடந்த 10 நாட்களாக மக்கள் முகாம்களில் தங்கி உள்ளனர்.

பயிர்கள் அழுகின

கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து 2 லட்சம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியாததால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.கொள்ளிடம் ஆற்று படுகையில் பயிர் செய்யப்பட்ட பருத்தி மற்றும் முருங்கை, சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் அழுகி விட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 10 நாட்களாக நாங்கள் முகாமில் தங்கி உள்ளோம். வேலைக்கு செல்லாமல் முகாமில் தங்கி உள்ளதால் தனியார் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்

எங்கள் வீடுகளின் சுவர்கள் மண்ணால் கட்டப்பட்டதால் வெள்ளத்தில் அனைத்தும் இடிந்து விழுந்து விட்டன. தண்ணீர் வடிந்ததாலும் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே தமிழக அரசு புதிதாக வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story