குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் புகுந்ததை கண்டித்து பொதுமக்கள் மறியல்
குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் புகுந்ததை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
அரியலூர்
தாமரைக்குளம்:
சாலை மறியல்
அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் வெளியேறுகிறது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் துர்நாற்றமும் வீசுவதாகவும், இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி அரியலூர் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
கழிவுநீர் அகற்றம்
இதனையடுத்து அரியலூர் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்க எடுக்கப்படும் என கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் கழிவுநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை கொண்டு கழிவுநீர் அகற்றப்பட்டது.
Related Tags :
Next Story