சுரங்கப்பாதை பாலம் அமைக்கக்கோரி குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சுரங்கப்பாதை பாலம் அமைக்கக்கோரி குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி ெரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மஞ்சத்திடல் ெரயில்வே நிலையத்துக்கு அருகே உள்ள விவேகானந்தா நகர் சுரங்கப்பாதை பாலம் அமைக்கும் பணி கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ரெயில்வே நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணி இதுவரை முடிவடையவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சுற்றிசெல்ல வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக ெரயில்வே கோட்ட மேலாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதேபோல் மகாலட்சுமி நகர் முதல் நாகம்மைவீதி வரை பிரதான சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து திருச்சி மாநகர குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது, சுரங்கப்பாதை மற்றும் சாலை சீரமைப்பு பணியை விரைவில் முடிக்காவிட்டால் மஞ்சத்திடல் ெரயில்வே நிலையத்தில் ெரயில் நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் லெனின் சக்திவேல், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.