ஏரி மண்ணை விற்பனை செய்ய எதிர்ப்பு டிராக்டர்களை இளைஞர்கள் சிறைபிடித்து போராட்டம் விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே ஏரி மண்ணை விற்பனை செய்ய எதிர்ப்பு தொிவித்து டிராக்டர்களை இளைஞர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூர்
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த மாத்தூரில் உள்ள பெரிய ஏரியில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதில் டிராக்டர்கள் மூலம் மண் எடுக்கப்பட்டு, விருத்தாசலம் நகர பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதுபற்றி அறிந்த அந்த பகுதி இளைஞர்கள், ஒன்று திரண்டு வந்து தூர்வாரும் மண்ணை ஏரியின் கரையில் கொட்டி கரையை பலப்படுத்திட வேண்டும், வெளியே எடுத்து சென்று விற்பனை செய்யக்கூடாது என்று கூறி மண் அள்ளி சென்ற டிராக்டர்களை வழிமறித்து சிறைபிடித்தனர்.
தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் விரைந்து வந்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உரிய அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையேற்று இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story