பால் குளிரூட்டும் நிலையத்துக்கு எதிர்ப்பு சாலை மறியலுக்கு முயன்ற 20 பேர் கைது


பால் குளிரூட்டும் நிலையத்துக்கு எதிர்ப்பு  சாலை மறியலுக்கு முயன்ற 20 பேர் கைது
x

பால் குளிரூட்டும் நிலையத்துக்கு எதிர்ப்பு

ஈரோடு

கோபி அருகே உள்ள மீன்கிணறு பகுதியில் தனியார் பால் நிறுவனம் சார்பில் சிறுவலூர், ராசாக்காபாளையம், குன்னத்தூர், கொளப்பலூர் உள்ளிட்ட பகுதியில் தினமும் காலை, மாலை என இரு வேளைகளும் விவசாயிகளிடம் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டு லாரி மூலமாக ஈரோட்டில் உள்ள நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் தாமதம் ஏற்படுவதால் பாலின் தரம் கெடுவதோடு, விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, தனியார் நிறுவனம் சார்பில் மீ்ன்கிணறு பகுதியில் 2 ஆயிரத்து 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய அளவிலான பால் குளிரூட்டும் நிலையம் அமைக்கப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சிறுவலூர் நால் ரோட்டில் ஒன்று திரண்டு நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி அறிந்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்றுக்கொண்டு பெரும்பாலானோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஒரு சிலர் ஏற்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அதைத்தொடர்ந்து 20-க்கும் மேற்பட்டோரை சிறுவலூர் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்களை தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்


Next Story