கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும் திருப்புவனம் தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட வேண்டும் என திருப்புவனம் தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
திருப்புவனம்
திருப்புவனம் கிழக்கு, மேற்கு ஒன்றியம் நகர தி.மு.க. சார்பில் செயற்குழு கூட்டம் திருப்புவனத்தில் உள்ள தனியார் திருமண மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவர்கள் சுப்பிரமணியன், இளங்கோவன் தலைமை தாங்கினார்கள். ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நாகூர்கனி அனைவரையும் வரவேற்றார். செயற்குழு கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் சேங்கைமாறன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.
கூட்டத்தில் மாநில வக்கீல் அணி துணைச் செயலாளரும், மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான வக்கீல் தினேஷ் புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கிப் பேசினார். விழாவில் மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, யூனியன் துணை சேர்மன் மூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் பிச்சைமணி, ஈஸ்வரன், சுப்பையா, வெங்கடேசன், அக்னிராஜ், ஒன்றிய நிர்வாகிகள் சக்திமுருகன், மகேந்திரன், தினகரன், ரவி, ராமு, அன்னமுத்து, சேகர், ஒன்றிய இளைஞரணி செயலாளர்கள் தேவதாஸ், அறிவுக்கரசு, கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கோபால், நகர் துணை செயலாளர் மீனாட்சிசுந்தரம் மற்றும் ஒன்றிய, கிளைக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்புவனம் ஒன்றிய பகுதிகளில் பூத் கமிட்டி அமைப்பது எனவும், கலைஞர் நூற்றாண்டு விழாவை அனைத்து கிளைக் கழகங்களிலும் சிறப்பாக கொண்டாடுவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.