வேடசந்தூரில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்
வேடசந்தூரில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மதுரை மண்டல அலுவலரின் உத்தரவின்பேரில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் என்.ஏ.என். 2.0 திட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட நோடல் அதிகாரி ஜி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
இதில் ஓய்வூதியம், வாரிசு அடிப்படையில் ஓய்வூதியம் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் மனு கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்று கொண்ட அதிகாரி ஜி.சுப்பிரமணியன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் ஒவ்வொரு மாதமும் 27-ந்தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என்று கூறினார்.
Related Tags :
Next Story