பொது வினியோக திட்ட குறைதீர் முகாமில் 83 மனுக்களுக்கு தீர்வு
பொது வினியோக திட்ட குறைதீர் முகாமில் 83 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
திருச்சி
லால்குடி அருகே பெருவளப்பூர் பிர்க்கா கண்ணாக்குடி ஊராட்சியில் பொதுவினியோக திட்ட குறைதீர் முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுகன் தலைமை தாங்கினார். பெருவளப்பூர் வருவாய் ஆய்வாளர் நாகநாதன் முன்னிலை வகித்தார். கண்ணாக்குடி கிராம நிர்வாக அதிகாரி வினோத் வரவேற்று பேசினார். முகாமில் வட்டவழங்கல் தனி தாசில்தார் முருகன் கலந்து கொண்டு குடும்பஅட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், நகல் ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளாக 83 மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டது. முடிவில் ரேஷன் கடை ஊழியர் குமாரி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story