தொண்டியை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா -பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
தொண்டியை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா -பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
தொண்டி
தொண்டி பேரூராட்சியின் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் அழகு ராணி ராஜேந்திரன் செயல் அலுவலர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தொண்டி பேரூராட்சி வளர்ந்து வரும் நகரமாகவும் அதனைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் இருப்பதால் தொண்டியை தலைமையிடமாக கொண்டு தனித் தாலுகா அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தொண்டி பேரூராட்சி பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக கடற்கரை சாலையில் மாதா கோவில் அருகிலும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறமும் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கவும், தொண்டி கடற்கரை பகுதியில் தடுப்புச்சுவர் அமைத்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட பேரூராட்சி கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதிக்கு தேவையான சாலை, குடிநீர், மின்சாரம், கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து விவாதங்களில் பங்கேற்றனர்.