போலீஸ் நிலையங்களில் சிறப்பு முகாம்:ஒரே நாளில் 253 புகார் மனுக்களுக்கு தீர்வு


போலீஸ் நிலையங்களில் சிறப்பு முகாம்:ஒரே நாளில் 253 புகார் மனுக்களுக்கு தீர்வு
x
தினத்தந்தி 9 April 2023 12:15 AM IST (Updated: 9 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்ட போலீஸ் நிலையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஒரே நாளில் 253 புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்ட போலீஸ் நிலையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் ஒரே நாளில் 253 புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

சிறப்பு முகாம்

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நேற்று சிறப்பு முகாம் நடந்தது.

நாகர்கோவில், தக்கலை, குளச்சல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 போலீஸ் துணை சரகங்களிலும் அந்தந்த போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் இந்த முகாம் நடத்தப்பட்டது. முகாமில் ஏற்கனவே நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது. பிறகு இருதரப்பினரையும் போலீசார் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் முகாமில் புதிய மனுக்களும் பெறப்பட்டன.

மனுக்களுக்கு தீர்வு

கோட்டார் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராமர் தலைமையிலும், வடசேரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலும் சிறப்பு முகாம் நடந்தது.

அந்த வகையில் குமரி மாவட்டம் முழுவதும் நடந்த சிறப்பு முகாமில் மொத்தம் 253 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. அதே சமயம் புதிதாக 557 புகார் மனுக்கள் பெறப்பட்டன.


Next Story