திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை


திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருவள்ளுவர் தினத்தையொட்டி திருக்கோவிலூர் அரசு அங்கவை, சங்கவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள திருவள்ளூவர் சிலைக்கு நகர தி.மு.க. செயலாளர் ஆர்.கோபி தலைமையில் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், திருக்கோவிலூர் நகர மன்ற தலைவருமான டி.என்.முருகன் மாலை அணிவித்தார். மாவட்ட ஊராட்சி துணை தலைவர் தங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி கண்ணன், பெற்றோர், ஆசிரியர் சங்க தலைவர் வினோபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர அவை தலைவர் டி.குணா வரவேற்றார். நிகழ்ச்சியில் தொ.மு.ச. நிர்வாகி சரவணன், நகர பொருளாளர் தங்கராஜ், சங்கர், நகராட்சி கவுன்சிலர்கள் கோவிந்து, கந்தன்பாபு, புவனேஸ்வரிராஜா, ரவிக்குமார் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story