ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலங்கள் மீப்பு


ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலங்கள் மீப்பு
x

ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலங்கள் மீட்கப்பட்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உட்கோட்டை கிராமத்தில் பட்டா எண் 11-ல் 45.52 ஏக்கர் நிலங்கள் உள்ளது. இந்த நிலம் பரமசிவம் மகன் மணிவண்ணன் என்பவர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் செந்தமிழ்ச்செல்வி உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளத்திடம் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆலய நிலங்கள் தனி தாசில்தார் கலைவாணன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ள மணிவண்ணன் யார்? என்பது தெரியாது எனவும், அப்படி ஒருவர் இப்பகுதியில் இல்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

எனினும் கோவிலுக்கு சொந்தமான நிலம் பல்வேறு தரப்பினர் மூலம் விவசாயம் செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நிலத்தை வீரநாராயண பெருமாள் ேகாவில் பெயரில் பட்டா மாற்றம் செய்ய கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.4 கோடியே 50 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மொத்தம் 365 ஏக்கர் நிலம் இக்கோவிலுக்கு இருப்பதாகவும், இதில் ஒரு ஏக்கர் நிலத்தில் வர வருமானத்தை கோவிலுக்கு ஒரு நாளைக்கு செலவு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. 365 நாட்களுக்கும் 365 ஏக்கர் நிலத்திலிருந்து வரும் வருமானத்தை கோவிலுக்கு செலவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story